வித்தியாசமான கனவு

மேகங்கள் மேடையாக,
ஓவியங்கள் நடனமாட,
கவிதைகள் கானம் பாட,
சூரிய சந்திரர்கள் களித்திருக்க,
கங்கை ஆற்றின் நடுவே,
பெருங் கூடம்,
ஆந்தையும், காக்கையும்,
கோட்டானும், குள்ள நரியுமாய்
சபை நிறைந்த கூட்டம்.
மழையே பன்னீராய் தெளித்து ,
வரவேற்பு.

தங்கம், வெள்ளி,
வைரம்,வைடூரியம்,
பட்சணங்களாய், தடபுடல் விருந்து.

தூக்கம் கலைந்து,
கனவும் மறைந்தது.

எழுதியவர் : arsm1952 (31-Jul-16, 3:01 pm)
பார்வை : 150

மேலே