இயற்கையை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் தொல்லைதான்

ஆஸ்திரிலேயாவில் சுமார் 30 மில்லியன் கால்நடைகள் உள்ளன. நாளோன்றுக்கு சுமார் 60000 மெட்ரிக் டன் சாணம் கிடைக்கிறது. இவை மேய்ச்சல் நிலத்தையே மூடி விடுகின்றன.

இந்தப் பிரச்னை நமது நாட்டில் இல்லை. காரணம் சாண வண்டுகள்தான். இந்த சாண வண்டுகள் சாணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி மண்ணுக்குள் இருக்கும் கூட்டிற்கு எடுத்துச் செல்கின்றன. அது நாளடைவில் நுண்ணுயிரிகளால் சிதைந்து விடுகிறது.

ஆஸ்திரிலியாவில் பெருகும் சாணத்தால் ஈக்களும் அதிகமாகி பிரச்னையாகிறது.

அங்கிருக்கும் மாட்டுப் பண்ணைகளெல்லாம் ஆங்கிலேயர் குடியேற்றத்திற்கு பிறகு தோன்றியவை. மாடுகளை மட்டும் ஏற்றிக் கொண்டு விட்டு விட்டால் பொதுமா ? அதன் சார்பு உயிரின்ங்களையும் எடுத்துச் செல்ல வேண்டாமா ?

அதனால் அவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து சாண வண்டுகளை ஏற்றுமதி செய்கிறார்களாம். ஆப்ரிக்காவில் ஒரு யானையின் சாணக் குவியலில் 7000 வண்டுகள் வரை இருக்குமாம்.

இயற்கையை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் தொல்லைதான்.



நன்றி: தங்க.சங்கரபாண்டியன்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (1-Aug-16, 12:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 465

மேலே