சொந்தக்காரி

மான்களின் கண்களுக்கு சொந்தக்காரி
புள்ளி மான்களின் வேகத்துக்கு சொந்தக்காரி

புன்னகைகளின் அரசிக்கு சொந்தக்காரி
கோபங்களின் புதல்விகளுக்கு சொந்தக்காரி
மகிழ்ச்சியின் எல்லைகளுக்கு சொந்தக்காரி

சண்டைகளின் ஆரம்பத்திற்கு சொந்தக்காரி
வெற்றியின் வாகைக்கு சொந்தக்காரி
நம்பிக்கையின் உறுதிக்கு சொந்தக்காரி

எந்தன் வாழ்வுக்கு சொந்தக்காரி
உந்தன் நிலை என்னவென
சொல்லு உன் நிலைமாறி

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (1-Aug-16, 3:59 pm)
பார்வை : 146

மேலே