நட்பின் மீது காதல்
“ ஓர்உயிராய் நாம்இருக்க இருவரி திருக்குறளும்
ஓர்பெரும் வார்த்தையில் நட்பென்றாகும். “ - ச.அருள்
கனவு கலைந்தாலும் கலையாத நினைவது
களிப்பும் சிறு கவலையும் நம்மைதாக்கும் போதும்
காலமும் கோலமும் மாறும்போதும்
கைகளது பிரியவில்லை !
எதுவாயினும் தொலைபேசியினை தொட்டாலே
என் கரமது எடுத்திடுதே உன் எண்ணினையே
எந்நாளும் எந்நேரமும் தடையுமில்லை தடுப்புமில்லை
என் உயிரே உன்னை நான் அழைத்திட !
சிறு பிள்ளையில் இணைந்த நம் கைகள்
சிகரம் தொடும்போதும் இணைந்தே இருக்கும்
சண்டைகளும் சண்டையிடும் பேசிடு என்று
சிரிப்பொலிகளும் வாழ்த்திடும் நம் நட்பின் ஆயுளுக்கென !
“ நட்பு “ என்னும் வார்த்தை மூன்று எழுத்து
நானும் அவளும் இணைந்த எங்கள் நட்பு இரண்டு
நட்பென்று கேள் சொல்வர் எங்கள் இரு பெயரினையும்
நடந்தாலே கண் வைக்கும் ஊர் நாளும் !
கண்கள் கலங்கி நின்றபோதும்
களிப்பில் கால் தடுமாறி துவண்டபோதும்
காதல் நம்மை அழைத்தபோதும்
கைகளது பிரியவில்லை !
ஒன்றென படித்தோம்
ஒன்றென வளர்ந்தோம்
ஒன்றென உயர்ந்தோம்
ஒன்றென ஆசிரியரானோம்
ஒன்றென காதல் கைபிடித்தோம்
ஒன்றென கலந்திருக்கிறோம்
ஒன்றாய் செயல்பட்ட நாங்கள்
ஓர் நூலினால் பிரிவோம் கல்யாணம் – இருந்தும்
ஒன்றாய் இருப்போம் அவர்களின் உறவோடு
ஒருவரின் கணவர் மற்றொருவரின் அண்ணன் என – பிறகு
ஓயாது எங்கள் பயணம் நட்பும் வாழ்வும் என !
கவிதையல்ல கதையுமல்ல
கரைந்திடாத காதல் காவியம்
கண்களின் நீரும் உரைத்திடும்
காலம் தாண்டி நிலைநிற்கும் நட்பென்னும்
காதல் காவியம் என் இனிய தோழிக்கென !