எச்சரிக்கை

குறைந்து மறைந்துவரும்
குருவி இனங்களின்
கீச்சுக்குரல் பாசைகளை
மொழி பெயர்க்க
கற்றுக்கொள்ளுங்கள்...!

அழிந்துவரும் மரங்களின்
சடசடவென முறியும்
கிளையோசையை
மொழி பெயர்க்க
கற்றுக்கொள்ளுங்கள்...!

துப்பாக்கி கொண்டு
அழித்துவரும் விலங்குகளின்
அலறலோசையை
மொழி பெயர்க்க
கற்றுக்கொள்ளுங்கள்...!

அழியும்
ஒவ்வொரு பறவையும்
அழியும்
ஒவ்வொரு மரமும்
அழியும்
ஒவ்வொரு விலங்கும்
நாளைய நம் அழிவின்
எச்சரிக்கைகள் ஏதாவதை
சொல்லிப் போகலாம்...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (2-Aug-16, 7:07 pm)
Tanglish : yacharikkai
பார்வை : 361

மேலே