துரோகி

என்னடா உலகமிது

இவனுக்கு இரண்டு பிள்ளை
அவளுக்கு இரண்டு பிள்ளை

இவனின் அவள்
அவளின் அவனை
மணந்தாயிற்று

இங்கே தத்தளிப்பதோ
இவன் எனும் அண்ணனும்
அவள் எனும் தங்கையும்
நான்கு பிள்ளைகளும்
அவர்களின் குடும்ப மானமும்

இப்படியும்
சில ஜென்மங்கள்
இருக்கத்தான் செய்கிறது
நாட்டில்

இது ஒரு உண்மை சம்பவம்
தொடர்ந்து வரும்
இன்னொரு உண்மை சம்பவம்

பக்கத்து பக்கத்து வீட்டார்
இந்த வீட்டில் ஓர் அண்ணனும்
அந்த வீட்டில் ஓர் அக்காவும்
இழிவாய் நடந்துகொள்ள
இருவருக்கும் தனித்தனியே
பிள்ளைகள் இருக்க
என்ன ஒரு மானங்கெட்ட செயல்

இந்த விஷயம் வீட்டாருக்கு தெரிய
தவறு செய்த பெண்ணின் கணவனுக்கு
கத்தி குத்து
குடல் சரிய விழுந்தார்

இதைப் பார்த்த
அவர்களின்
உறவினர்கள்

ஊருக்கு செல்ல
பேருந்தில் அமர்ந்திருந்த
தவறு செய்த அந்த அண்ணனை
பேருந்திலேயே
அடித்து கொன்றுவிட்டனர்.

இன்றோ
அந்த அண்ணனை திருமணம்
செய்து கொண்ட அந்த அக்கா
பிள்ளைகளை வைத்துக்கொண்டு
தினமும் மிகக் கடினமாக உழைக்கிறார்.

கத்தி குத்து விழுந்த அண்ணன்
சரியாகிவிட்டார்.
அவர்கள் குடும்பம்
சொந்த வீடுருந்து
அகதி போல்
ஊரை விட்டு
ஒதுக்கி வைத்தது போல்
கழனியிலேயே
குடிசை கட்டி வாழ்ந்துவருகிறார்கள்

யாரோ செய்த தவறுகளுக்கு
யார் யாரோ வேதனையை
அனுபவிக்க வேண்டியுள்ளது

எப்படித் தான்
இவர்களும்
மனிதர்களாக
பிறந்தார்கள்
என்று தெரியவில்லை

மனிதன்
என்றால்
உண்மையானவனாகவும்
நம்பிக்கையானவனாகவும்
நேர்மையானவனாகவும்
இருக்க வேண்டும்

மனிதர்களின்
எண்ணம்
இந்த அளவிற்கு
கேவலமாகிவிட்டது

தெருவில் சென்று
கொண்டிருக்கும்
பொழுது
குடித்துவிட்டு
கும்மாளம்
போடும்
ஆண்கள்
எல்லா பெண்களையும்
ஒரே மாதிரி எண்ணுகிறான்

நான்
மட்டும்
அந்த
இடத்தில்
இருந்தால்
செருப்பை எடுத்து
அவன் கன்னத்தில் வைப்பேன்
சிரிப்பால் அடிக்கும்
பெண்களால் தான்
இவ்வளவு தவரும்

எனக்கு பயம்
என்று எதுவும்
இல்லை
ஏனெனில் நான்
தவறொன்றும்
செய்யாதவள்
ஆதலால்
துணிந்து கேட்பேன்
உன் தாயும் ஒரு பெண் தானே என்று

ஒரு நாள்
வாழ்ந்தாலும்
உண்மையாக வாழ்ந்துவிட்டு போகவேண்டும்
எனை கத்தியால்
குத்தினாலும்
நீதியை சாகவிடமாட்டேன்
நான்

நான் வாழும்(சாகும்) வரை
செத்த பின்னும்
செத்தாலும்
என் மனதில்
எந்த (எல்லா) நொடியும்
நீயே இறையே
என்னை ஏற்றுக்கொள்
இறைவா
இந்த
இழிவான
உலகத்தை
என்னால்
காண முடியாது
உன்னால் தான்
நான் வாழ்கிறேன்
உன் மடியில் எனை ஏற்றுக்கொள்
(கதறி அழும் குழந்தைக்கு
தாய் மடி ஆறுதல்
கணவன் மடி கிடத்தல்
மனைவிக்கு மகிழ்ச்சி
இரண்டையும்
உன் மடியில்
உணர்கிறேன் என்
தாயுமானவா)
தலைவா
~ தலைவி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Aug-16, 8:23 am)
Tanglish : thuroogi
பார்வை : 160

மேலே