மனதின் தேடல்
மனமும் ஒரு கூகுள் போன்றது தானோ...
எப்போதும் எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது..
அது,
அன்னையிடம் அன்பையும்,
தந்தையிடம் பண்பையும்,
குருவிடம் அறிவையும்,
காதலியிடம் ஆறுதலையும்,
பசித்த உடன் உணவையும்,
படுத்தவுடன் உறக்கத்தையும், உறுதுணையாக உறவையும், ட்ராபிக் சிக்கனலில் பச்சை விளக்கையும்,
பஸ் பயணத்தில் ஜன்னல் ஓர இருக்கையும்,
இனிமையான இளமையும், முதுமையான அறிவையும், நம்பகமான நட்புகளையும், பத்தும் செய்யும் பணத்தையும்,
அது கசந்து விட்ட பிறகு ஆன்மீகத்தையும்,
இளமையிலே அழகான துணையும்,
முதுமையில் அன்பான துணையும்,
பெரியோரிடம் பாராட்டையும்,
சிறியவர்களிடம் மரியாதையும்,
நிதானத்தில் அவசரத்தையும், அவசரத்தில் நிதானத்தையும், எடுத்தவுடன் பலனையும்
தேடிக்கொண்டே இருக்கிறது... தேடல் எல்லாம் கிடைத்த பிறகும்...
மனமானது...
உதட்டில் புதைத்த புன்னகையையும்,
வாழ்வில் தொலைத்து விட்ட நிம்மதியையும்
தேடுகிறது என்றும் என்றென்றும்...
ஒரு நாள், மனமானது யோசிக்கத் தொடங்கியது... முதல் தேடலில் நின்றிருக்கலாமோ...
தாயின் மடியில் தவழும் குழந்தையாய் என்றும்...!!
ஆனால் மறந்தும் கூட நினைப்பதில்லை...
பிறரிடம் நாம் எதிர்பார்த்த தேடலை...
பிறரும் நம்மிடம் தேடுவார்கள் என்று...!
-ரஞ்சித் பழனிச்சாமி