காதலை தேடி-12

காதலை (லே) தேடி-12

அதிகாலை வெளிச்சத்தில்
அசைந்தாடும் என் விழிகள்
துயில் களைந்து விழிப்பதே
என் நெஞ்சோரமாய்
புன்னகைக்கும் உன் நினைவுகளை
ருசிக்க தான் என் சைக்கியே!!!!!!!!!!.....

காலையில் விடிந்ததும் விடியாததுமாக சகியை காணும் ஆவலில் ரெடி ஆகிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன்........

"அப்பா நான் சகி வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்".....

பேப்பர் படித்து கொண்டிருந்த அப்பா அப்படியே ஒரு மெல்லிய பார்வையை என் மீது வீசினார், அவர் பார்வைக்கு அர்த்தம் என்னவாக இருக்கும், காலங்காத்தால சுடுதண்ணிய கால்ல கொட்டிக்கிட்ட மாதிரி எதுக்கு இவ்ளோ அவசரம், எதுக்கு இப்படி பறக்கறானு நினைச்சிருப்பாரு.........

" அம்மாகிட்ட சொல்லிட்டு போப்பா, அப்புறம் அவ கேட்கற கேள்விக்கெல்லாம் என்னால விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது......"

"சரிப்பா, சொல்லிட்டே போறேன்"

"அம்மா, நான் சகி வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்மா"

"கிச்சனில் இருந்து எட்டி பார்த்த அம்மா எதோ யோசித்துவிட்டு, "இருடா, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி ஆகிடும், சாப்பிட்டுட்டே போ, அவ்ளோ தூரம் வண்டி ஓட்ட தெம்பு வேணும்ல" என்று சொன்னதோடு தன் வேலையில் மும்மரமானாள்......

"நான் போற வழியில சாப்டுக்கறேன்மா, அப்பா நான் கிளம்பறேன்" கூறிவிட்டு அவர்களின் அடுத்த பதிலுக்கு கூட காத்திருக்காமல் பைக்கை ஸ்டார்ட் செய்திருந்தேன்......

சகியின் ஊருக்கு போகும் ரூட் எல்லாம் எனக்கு ஆகாயத்தில் நடப்பதற்கு சமம், அவ்வளவு அலைக்கழிப்பு, குறுக்கு சந்து, வளைவு பாதை, பாதை அடைப்பு என மண்டையை சூடேற்றும் வள வளவென நீளும் பயணம் தான்.....இருந்தாலும் அவளை பார்க்கவேண்டுமென்ற என் தவிப்பு எதையும் யோசிக்க விடாமல் தனியாக வண்டியை ஸ்டார்ட் செய்து எனக்கு தெரிந்த வரை என் பாதையில் செல்ல வைத்தது..........

மூன்று மணி நேர சுத்தலுக்கு பிறகு ஒரு குறுக்கு சந்தில் வேகமாக முட்டி நின்ற என் வண்டியின் பின் டயர் தன் மூச்சை நிறுத்தி பஞ்சராகி இருந்ததை பாலன்ஸ் கிடைக்காமல் நான் தடுமாறி விழுந்தபின்னரே தான் என் மூளைக்கு உரைத்தது.......

"கடவுளே என்னப்பா இது, இப்போ இந்த தெரியாத இடத்துல எங்க நான் மெக்கானிக் ஷாப்பை தேடறது" வாய்விட்டு பேசியே சலித்து கொண்டேன்....

அங்கு சென்று கொண்டிருந்த ஒரு பையனை கூப்பிட்டு ..

"தம்பி இங்க ஒரு நிமிஷம் வாப்பா"

"என்னனா, என்ன வண்டி பஞ்சர் ஆச்சா"

"ஆமாப்பா, இங்க மெக்கானிக் ஷாப் எங்க இருக்குனு உனக்கு தெரியுமா? நான் கொஞ்சம் அவசரமா போய்ட்டு இருக்கேன்"

"நல்லா போச்சு போங்கண்ணா"

"என்ன தம்பி சொல்ற, புரியல"

"உங்களுக்கு கெட்ட நேரம் உங்க வண்டி மூலமா வந்துருக்குனு சொன்னேன்"

"ஏன் இப்படி சொல்ற, இங்க மெக்கானிக் ஷாப்பே இல்லையா?"

" மெக்கானிக் ஷாப்லாம் இருக்கு....அதுவும் நீங்க இருக்க இடத்துக்கு ரெண்டு சந்து தள்ளி தான், ஆனா..........."

"ஆனா என்ன............"

"மெக்கானிக் சுந்தர் இப்போ செம மப்புல இருக்காரு, அவர் மப்புல இருக்கும்போது காத்தடிக்க வண்டிய விட்டா கூட அரைமணிநேரம் பண்ணுவாரு, உங்களது வேற பஞ்சர், அரை நாளே ஆனாலும் ஆச்சரிய படறதுக்கு இல்ல"

"இங்க வேற எதாவது மெக்கானிக் ஷாப் இருக்காப்பா ?"

"சுந்தர விட்டா வேற கடையே இல்ல,சுந்தர் கைதேர்ந்த மெக்கானிக் தான், என்ன ஒண்ணு தண்ணி போட்டா மட்டும் ஆளு கொஞ்சம் சோம்பேறி ஆய்டுவாரு" "இப்போதைக்கு அவரை விட்டா உங்களுக்கு வேற வழியே இல்ல, இந்த சந்துவழியா தள்ளிக்கிட்டு போனா அந்த பக்கம் சிவப்பு பெயிண்ட் கொட்டனாப்புல ஒரு செவுரு இருக்கும், அங்க லெப்ட் சைட் சந்துல பூந்தா அந்த சந்து முடியற இடம் மெக்கானிக் ஷாப் தான்"

"ம்ம்ம்ம்ம், ரொம்ப தேங்க்ஸ்பா,இதுக்கு மேல நான் பாத்துக்கறேன்" என்று கூறிவிட்டு வேறு வழியில்லை என்ற வருத்தத்தோடு அங்கு சென்றால் அடுத்த ஒருமணி நேரத்தில் மப்பில் இருக்கும் சுந்தருக்கும் என் வண்டிக்கும் நடந்த கலவரத்தில் கடைசிக்கட்டமாக கரிபூசப்பட்டு பலிகடா ஆனது வேறு யாரும் இல்லை, உங்கள் ஹீரோ நானே தான்"

சீக்கிரம் போகவேண்டுமென்ற அங்கலாய்ப்பில் மெக்கானிக்குக்கு உதவி செய்ய போன என் சட்டையெல்லாம் கிரீஸும் மையுமாக பார்க்கவே அலங்கோலமாய் அடுத்த மெக்கானிக் சாரதி என்ற பட்டத்திற்கு உகந்தவனாய் மாற்றப்பட்டேன் என்றே சொல்லலாம்......

"நீ செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி சுந்தர் சார், இந்தாங்க பஞ்சர் போட்டதுக்கு பணம்"

"சும்மா போ சார், இந்த சுந்தர் கைபட்டுடுச்சுல்ல இனி உன் வண்டி எப்படி பறக்க போவுது பாரு"

"பர்ஸ்டு இங்க இருந்து நான் பறந்தா போதும்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வண்டியை ஒட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.........

சகி வீட்டிற்கும் எனக்கும் இன்னும் 2 கிலோ மீட்டர் தான் இடைவெளி.........

இந்த அழுக்கு சட்டையும் மையுமாக சகி வீட்டுக்கு நான் போய் நின்னா, அதுவும் கல்யாணத்துக்கு அப்புறம் முதன்முதலா பாக்க போற என் அருமை மனைவி முன்னாடி.......நினைக்கவே சங்கடமா இருக்கு........

சகியை பார்க்க போகலாமா, வேண்டாமா என்ற என் தவிப்பு தொடர்ந்து ஒரு கால் மணிநேரம் தொடர்ந்து பின் நெகடிவ் பாசிட்டிவ் என இரு வழிகளிலும் யோசித்துவிட்டு இப்போ அங்க போறத விட வீட்டுக்கே ரூட்டை மாத்தறது தான் நல்லது என்று தோன்றவே சோகம் அப்பிய முகத்தோடுவீட்டுக்கு வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்....


"அம்மா, காபி எடுத்துட்டு வாங்க"கத்திகொண்டே உள்ளே நுழைந்த எனக்கு பெருத்த அதிர்ச்சி......

"டேய், சகிய பாக்கறேன்னு காலைல கிளம்பிபோன, மதியம் தான் வீட்டுக்கு வந்து சேந்துருக்க அதுவும் இப்படி ட்ரெஸெல்லாம் மை அப்பிக்கிட்டு"என்று அம்மா ஏதேதோ கேள்வி கேட்க எனக்கு என் முன்னாடி இருந்த அதிர்ச்சியை தவிர வேறு எதுவும் என் கண்ணுக்கும் காதுக்கும் புலப்படவே இல்லை........

"சகி, நீ எப்படி இங்க???"

"நான் தான் மாப்ள கூட்டிட்டு வந்தேன், சகியும் இங்க வரணும்னு ஆசைப்பட்டா, அதான் கூட்டிட்டு வந்த்துட்டேன்".......

இந்த மனுஷன் இருக்காரே நான் சொல்றத அவர் கேட்டாரா இல்லையா, நேத்தே போன்ல படிச்சி படிச்சி சொன்னேல்ல, சகிய பாக்க நானே வரேன், அவளை ரெண்டு நாள் கழிச்சி கூட்டிட்டு வாங்கனு.......இப்போ என்னனா இப்படி அதுவும் நான் இந்த நிலமைல இருக்கும்போது என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்காரே.......அட பாவி மனுஷா, நீ...லாம் நல்லா வருவ......

"மாப்ள உங்களுக்கு இப்போ உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருக்குமே"

"ஆமா மாமா, நீங்க பண்ணதுக்கு அப்படியே உங்களை கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் தரணும்னு தோணுது"

"அட போங்க மாப்ள, நீங்க வேற, உங்களுக்கு தான் என்மேல எவ்ளோ பாசம்"

அட என்னோட அறிவாளி மாமா, உங்களை அப்புறம் கவனிச்சிக்கிறேன்.....

"இப்போ எப்படி சகி இருக்க, பீவர் சரி ஆச்சா?, சாப்டியா? டேப்ளெட்லாம் போட்டுக்கிட்டயா, சரி ஆகிடுச்சுனு அலட்சியமா இருக்க கூடாது, டாக்டர் சொன்ன மாதிரி ரெண்டு நாளைக்கு புட் அண்ட் மெடிசன்லாம் கரெக்ட்டா எடுத்துக்கணும்"

"ம்ம்ம்"

இவ்ளோ நேரம் நான் சொன்னதெல்லாத்துக்கும் வெறும் ம்ம்ம் தானா....

"சகி நான் பிரெஷ் ஆகிட்டு வரேன், மாமா கொஞ்ச நேரத்துல நான் வந்துடறேன்"

ரெண்டுபேரிடமும் ம்ம்ம்ம் என்று பதில் வரவே வேகமாக படி ஏறி என் ரூமுக்கு வந்து சேர்ந்தேன்........


மாமா செஞ்சது கூட ஒரு விதத்துல எனக்கு நல்லதே தான், என் சகிய என்கிட்டயே கொடுத்துட்டாரு, இனி சகிய என்கிட்டே இருந்து யாராலயும் பிரிக்க முடியாது என்ற சந்தோஷத்தில் பிரெஷப் ஆக பாத்ரூமுக்குள் நுழைந்தேன்......

ஆனால் விதியோ எங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்தது, என்னையும் சகியையும் பிரித்தே தீருவேன் என்ற வரிந்து கட்டிக்கொண்டு விளையாட ஆரம்பித்தது........

எழுதியவர் : இந்திராணி (6-Aug-16, 1:42 pm)
பார்வை : 547

மேலே