ஒரு தாயின் வயிற்றில்

வாழ்ந்தான் தனக்குத் தானே
தனது தானே எல்லாம்
என்று சிவலிங்கம்
நினைக்கவில்லை
மற்ற்வர்களைத் துளியேதும்.

விலகினான் தனக்கு இல்லை
என்று நினைத்துக் கொண்டு
சுந்தரம் .
தன்னிடத்தை விட்டு விட்டு
மற்றவர்களுக்கு தனதையும் .

கலக்கினான் .முழுவதுமாக
நேர்மை மாறி நிலைமை தவறி
மெய்யன்
கருதவில்லை மானம்
நாணயம் அதற்காக எதையுமே.


கெடுத்த்தான் குடியை
ஒழுக்கம் அற்று இடம் தடுமாறி
மாணிக்கம்
கடுகளவும் எண்ணவில்லை
எதைப் பற்றியுமே .

ஒரு தாயின் வயிற்றில்
பிறந்த நான்கு
விநோதங்கள்.

எவனுமே நேர் கோடாக
அல்ல.

எழுதியவர் : மீனசோமசுந்தரம் (6-Aug-16, 10:01 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 289

மேலே