ராதை

உன்
கையெழுத்துதானடி
எனக்கு கீதை
கண்ணழகால்
ஊற்றுகிறாய் போதை
இந்தக் கண்ணனுக்கு
நீதானடி கோதை
பாரதத்தைவிட பெரியது
என் காதல் காதை
உனக்கு மட்டும்
சொல்கிறேன் காட்டடி
உன் காதை
உன் வழி மட்டுமே
எனக்கு பாதை
என்னை மழலையக்கியவள்
இந்தப் பேதை
ஊர் மெச்ச வேண்டும்
கண்டு நம் தோதை
உம் என்று சொல்லடி
மண்டு என் ராதை
ஏற்பாயோ என் தூதை
கண்ணன் ராமனாவேன்
நீ ஆனால் சீதை