காதல் மான்

அவள் கடைக்கண்ணால்
எனைப் பார்த்தபோது
பராசக்தியே பாராசக்தி
கொண்டது என் உடல்
பெண்ணே
கருப்பு கண்ணாடி அணிந்து
உன் சிவப்பு முகத்தை
ஒரு முறை கண்ணாடியில் பார்
தெரியும் அண்ணாவின் கொடி
வழியில்தான்
மந்தை மானைக்கண்டேன்
அவள்
விழியில்தான்
சந்தை மீனைக்கண்டேன்
கன்னக்குழியில்தான்
விந்தை தேனைக்கண்டேன்
எண்ணக்குழியில்தான்
அவளோடு செல்ல
சிந்தை ஆணை கொண்டேன்
காதலியே
உன் மூச்சு காற்றெல்லாம்
என் காலடி வந்து
தற்கொலை செய்கின்றன
உன் பிரிவு தாளாது
நான் மட்டும்
உயிர்வாழ்கிறேன்
அவற்றை சுவாசித்து