மகிழ்ச்சி தரும் நட்பு

நண்பர்கள் மீண்டும் பிறப்பதில்லை
உண்மை நட்புகள் என்றும் அழிவதில்லை...!

மகிழ்ச்சி தரும் நண்பர்களை
ஒருபொழுதும் நான் மறப்பதில்லை...!

நட்பே...!
உன் நினைவுகள் வரும் போதெல்லாம்...
ஒரு நட்சத்திரத்தைப் படைக்க சொன்னேன்...வானில்!

அன்பின் அழகே...!
இன்றேனும் வானத்தை நிமிர்ந்து பார்...

உன்னால் மலர்ந்த நினைவுகளை
முடிந்தால் இன்று எண்ணிப் பார்...என்னை

என்னைப் போல் உன்னை
விரும்பியவன் எவனுமில்லை... இப்பூவுலகிலே...!

கற்பனையை நேசி
கவிதை பிறக்கும்...

கவிதையை நேசி
காதல் பிறக்கும்...

நல்ல நட்பை
உண்மையாய் நேசி
மகிழ்ச்சி பிறக்கும்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Aug-16, 11:27 pm)
பார்வை : 617

மேலே