அனுமதி துணையே

உன் கண்கள் செய்யும் யுத்தத்தில்...
என் எண்ணம் சிதைந்து போனது!

உன்னை எதிர்த்து வெல்லவே...
யுத்தி ஒன்றும் இல்லையேன்?

இனி என்ன செய்யும் உள்ளம்
தினம் உன்னைக் காணத் துள்ளும்...

வெல்லம் என்ன வெல்லம்...?
உன்னிதழ் அதனை வெல்லும்...!

என் சொம்மொழியைக் கொல்ல
வந்து பிறந்ததோ உன் விழியோ?

என்னால் நொடி கூட இன்மேல்...
வாழமுடியாது தனியே...!

உன் நிழலாய் நானும் வாழ
அனுமதி கொடு துணையே...!

எழுதியவர் : கிச்சாபாரதி (7-Aug-16, 10:05 pm)
Tanglish : anumathi thunaiye
பார்வை : 136

மேலே