நட்பின் முகங்கள்

நட்பில் மலர்ந்த
முக்கியமானவர்களை
காணவில்லை
தேடி கொண்டிருக்கிறேன்
அந்த பூங்காவனத்தில்..
பூக்களை அல்ல
என் நண்பர்களின் நினைவுகளை ...

ஓடி ஓடி
நினைவுகளை பிடிக்கின்றேன்
மூச்சிரைக்கவில்லை ..
இது தானே நம் நட்பின்
சாகசம்...

பத்திரமாக
உறங்கிய உணர்ச்சிகள் எழுந்து விளையாடும் தினம் ..
இன்று நண்பர்கள் தினமாம் ...

நம் வாழ்க்கையில்
எத்தனை நண்பர்கள் அனைவருடனும் வாழ்ந்தோம்
வாழ்கின்றோம் ..
நினைவு கூர்ந்தால்
தினம்தோறும்
நண்பர்கள் தினம்தானே...

பள்ளி ,கல்லூரி
விளையாட்டு மைதானம்
உடற்பயிற்சி மையம்
சித்திரை தேரோட்டம், தண்ணீர்ப்பந்தல் அலுவலகம் ,எழுத்துதளம்
இதில் கைகோர்த்தோம்
நட்பின் முகங்களாய் ...

சில நண்பர்கள்
விடுபடவில்லை...
அவர்கள்
நம் மனதோடு ஒட்டிக்கொண்ட
சுகமாய் உந்துகிறார்கள்
உயிர்மூச்சாய் ...
இதயம் துடிக்கும் வரை
பிரியாது ....

நட்பின் கடலில்
நினைவலைகளில்
நீந்தும் மீன்குஞ்சுகள் தானே
நாம் ...
இதில் பயமில்லை இனி சுகமே ...


நன்றி நண்பர்களே...

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (8-Aug-16, 2:37 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : natpin mugankal
பார்வை : 581

மேலே