நான் உன் அழகினிலே
நான் உன் அழகினிலே.....!
உன் ஒரு விழி பார்வையிலே
ஓராயிரம் கவிகள் கண்டேனடி
உன் ஒரு விரல் தீண்டையிலே
பல நூறு ஜென்மங்களும் கடந்தேனடி....
உன் மைவிழி பார்க்கையிலே
என் கண்களும் விண்மீன் ஆகுதடி
உன் உதட்டோர மச்சத்தில் தான்
என் வாழ்வின் மிச்சமும் உள்ளதடி....
உன் காதணி அசைவினில் தான்
என் மனமும் ஆட்டம் கண்டதடி
உன் சுருள்முடி நீயும் ஒதுக்கையில் தான்
என் இதயமும் உன்னிடம் சுருண்டதடி....
உன் புருவ வளைவினில் தான்
என் உயிரும் உன்னுடன் கலந்ததடி
உன் கன்னக் குழியினுள் தான்
எனையே முழுதாய் இழந்தேனடி....!!