வயல் வெளியில்
வண்ண வண்ண பறவைகளும் -
வயல்தனிலே வாயாட !
வழக்கமாய் வருவதையும் -
வாடிக்கையாய் ஆக்கியதே !
மனக்குழப்பத்தில் சென்ற நானும் -
மாசில்லா காற்றுதனில் !
வயல் வெளியில் வளம் வந்தேன் -
சுவாசம் கூட சுகம்தானே !
சூரியன் மறையும் அந்தி நேரம் -
சுகமான காற்றுதனில் !
வயல் வெளியில் யாரேனும் -
வாழ்க்கையும் தொலைத்ததுண்டா ?
மனதை வருடும் மாலைநேரம் -
வயல் வெளியில் செல்லுகையில் :
மனமெல்லாம் நிறைந்திருக்க -
மகிழ்ச்சி அன்றி வேருன்டோ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
