காதலிக்கவே இல்லை என்று

கண்ணுறங்க மறுக்கிறேன் - நீ
கனவில் வருகிறாய் என்று
சந்தர்பத்தை தவிர்க்கிறேன் - உன்னை
சந்திக்க நேருமே என்று
நினைவுகளையே வெறுக்கிறேன் - உன்
நினைவு வருமே என்று
என்னையே ஏமாற்றுகிறேன்-உன்னை
காதலிக்கவே இல்லை என்று

எழுதியவர் : (8-Aug-16, 7:42 pm)
பார்வை : 45

மேலே