ஏற்ற படிப்பே ஏற்றம் தரும் படிப்பு

கல்லூரி படிப்பை நோக்கி செல்லும் மாணவனே!
உனக்கு ---
ஐம்பொறிகளின் செயல்பாடுகள் பற்றி
தீர அறிந்து கொள்ள ---
இயல்பாகவே ஆர்வம்
உயர் அலையாய் பொங்குகிறதா?
அதே சமயம்
இயந்திரங்கள் அறிய ஆர்வமே இல்லையா?
அப்படியாயின்
உனக்கேற்ற துறை
பொறியியல் இல்லை!
ஐம்பொறியியலாம்
உடலியல்!
யாருக்கேனும்
உடல்நலம் குன்றினால்
உன் மனம் பதைபதைக்கவும் செய்கிறதா?
அவர்களை நலமாக்க உதவுகிறாயா?
உடலியல் அதை சார்ந்த மருத்துவமுமே
உனக்கேற்ற துறை!
ஏற்ற துறையே
ஏற்றம் தரும் துறை!
பொறியியலும் நல்ல கல்விதான்!
வணிகவியலும் நல்ல கல்விதான்!
மருத்துவமும் நல்ல கல்விதான்!
எந்தக் கல்வியும் தாழ்ந்தது அல்ல!
ஆனால் ...... நினைவு கொள்!
ஆர்வத்துக்கு ஏற்ற கல்வி நலம் தரும்!
திறமைக்கு ஏற்ற கல்வி வளம் தரும்!
ஏற்ற கல்வியே ஏற்றம் தரும் கல்வி!
எந்தத் துறையிலும் பட்டப் படிப்புடன்
பட்ட மேற்படிப்பும் சேரும்போது
வாய்ப்புகள் கூடும்! வெற்றி தேடி வரும்!
துறை எதுவாயினும்
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!
கற்க! கசடு அறக் கற்க!
புகழும் மேதையாய் நிற்க!

எழுதியவர் : ம கைலாஸ் (9-Aug-16, 5:24 pm)
பார்வை : 903

மேலே