வயதும் முதிர்வும்

சிறு வயதில் விடலை என்றனர்,
பெரியவன் ஆனதும் பக்குவம் வரும் என்றனர்!
வயதின் நேர் விகிதாச்சாரம் முதிர்ச்சியாம்-
நம்பினேன் நானும், முதிர்ச்சியை எதிர்நோக்கியே !

வளர்ந்தும் போனேன்,
உலகும் விரிந்தது,
மக்களின் பன்முகம் புலர்ந்தது,
பக்குவம் பற்றிய விசாரணை எழுந்தது !

நாளை நிச்சயமற்ற வாழ்வில்,
நான் என்ற அகங்காரம்!
நிலையின் அடிப்படையில் அங்கீகாரம்!
நடமாடும் தராசாய் எதற்கும் விமர்சனம்!

எண்ணம், சொல், செயல் ஒத்திசைப்பின்றி நாராசம்!
மற்றவர் வீழிச்சியில் எழுச்சி,
அற்றவர் அரவே ஆகாதவர்,
பெற்றவர் சகவாசத்தில் பெருமிதம்!

வயது முதிர்ந்தோராய் பலர் இவ்வாறுமே,
வாழ்வின் தன்மை தலைக்கு ஏறாமல் , நரைத்தோறுமே !
வயதும் பக்குவமும் விகிதாச்சாரத்திலா ?
வியந்தேன் நானும், ........
முதிர்வும் வந்துவிட்டதோ?!!!

எழுதியவர் : மகா !!! (10-Aug-16, 12:26 am)
பார்வை : 105

மேலே