தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 6--முஹம்மத் ஸர்பான்
51.கல்லறை தோட்டம் அடிமையின் சடலத்தை
---வரமாக ஏற்றதால் பூக்கள் தோட்டமாகிறது---
52.காற்றில் அசையும் தளிர்களை காண்கையில்
--கைதி கண்ட தூக்கின் கனவும் பலிக்கிறது--
53.நிசப்த இருளில் தனித்து நிற்கும் மரங்கள்
தன் மறைவில் கற்பையிழந்த பெண்ணின்
----வாழ்க்கை எண்ணி கண்ணீர் விடுகிறது---
54.முகவரியில்லாத பாதையில் கால்கள் நடக்கிறது
ஊரை கடந்து நதியை பாய்ந்து இமயம் ஏறினாலும்
மண்புழுவின் ஆறடி வீட்டுக்குள் விருதை பெறுகிறது.
55.கல்லடி பட்ட காயங்கள் தளம்பின்றி மாறினாலும்
சொல்லடி பட்ட நெஞ்சம் இறக்கும் வரை வலிக்கிறது.
56.பட்டம் பெற்ற கல்வி தொழிலோடு முடிந்து விடும்
பட்டம் பெறாத வாழ்க்கை மரணித்தும் தொடர்கிறது.
57.முகவரியிருந்தும் நாடோடி வாழ்க்கை வாழும்
வயது முதிர்ந்த தாயும் தந்தையும் சிறை போல் அடைக்கப்பட்ட
அறையின் நிழலில் பிள்ளை முகம் ரசிக்கின்றனர்.
58.தூண்களில்லாத வானமும் கலவையில்லாத பூமியும் முடிவிடமாய்
மனிதன் ஆராயும் இறைவனின் அரிய விஞ்ஞானத்தின் அட்டைப் பக்கம்
59.கைதியாக சிறைப்பட்ட பெண்கள் கூட்டம்
வெறும் உடலாக காமத்தின் குறிகளில்
இச்சைப் பசி தீரும் வரை சிதைக்கப்படுகிறது.
கல்லறிந்து கொல்ல வேண்டிய வேதத்தின் பக்கமும்
மதப் போராட்டம் செய்பவன் கண்ணில் தெரிவதில்லை
60.சுற்றிடும் நிலவும் கால்கள் உடைந்து
மலையின் உட்புறம் ஒளிந்து கொள்கிறது.
தன்னொளியில் கன்னிப் பெண்ணும்
விலை மகளென மாறக் கூடாதென்ற அக்கறையில்...,