என் அம்மாவும் அப்பாவும்
பிரசவ அறையில் என் அம்மா..!
அவள் கருவறையில் - நான்...!
வெளியில்...
அலையாய் அலையும் என் அப்பாவிற்கு
வேதனைத் துளிகள் இல்லாமல் இருக்குமா?
தண்ணீர் குடம் உடைந்து
வெளியில் வரவே காத்திருந்தேன்...!
உயிர் போகும் வலியை
என் தாய்க்கு அப்பொழுது
கூட்டியிருந்தேன்...!
நல்ல நேரம் காலம் பார்த்து
அவசர சிகிச்சை செய்து
என்னை யாரும் வரவேற்கவில்லை...!
காரணம்...
பணம் வசதியில்லாத ஏழை...!
எனினும்...
ஆபத்துக்கால பெருமூச்சோடு
அமைதியாய் நான் வெளிவந்தேன்...!
பேர்கால வலியை
எட்டாவது முறையாய்...
அறிந்தவள் என் தாய் என்பதில் மகிழ்கிறேன்...
பள்ளிக்கு செல்லாமலே... அன்று
அவள் பெற்ற மலடி பட்டத்தை
எழுந்து கிழித்தெறியத்தான்...!
ஊரார் முன்னே
தான் பெற்ற எட்டு
குழந்தை செல்வத்தையும்...
அன்புடன் அள்ளி அரவணைத்தவள்தான்
என் தாய்...!
எனக்காய் துடித்த மார்போடு
என்னை இறுக்க அணைத்து
மகனே மகனே என்று
உயிர் வலி(மை)யோடு...
முளைப்பால் கொடுத்தவள்தான்
என் தாய்...!
தாய்க்கு தலை மகன்
தகப்பனுக்கு இளைய மகன் என்பதால் என்னவோ ....
என்னிளம் வயதிலேயே... கொல்லி போட்டேன்
என் தந்தைக்கு!
என் தாயோடு மட்டும்தான்
இருக்கின்றேன் இன்னிக்கு...!