காதல் புனிதம்
கண்ணே கண்மணியே
உன்னை கண் தேடுதே
நெஞ்சம் உன்னை மட்டும்
நினைக்கிறதே...
மனதும் உன்னை மட்டும்
யோசிக்கிறதே
இதயம் உன் பெயரை மட்டும்
உச்சரிக்கிறதே...
மூச்சு உன் நினைவை மட்டும்
சுவாசிக்கிறதே
நீ இன்றி உயிர் வாழாது
என் கூடு...
எப்படி தாங்குவேன்
மாற்றான் காதலியாக காண
உன் காதல் எனக்கருள
வாய்ப்பே இல்லையா
நான் கேட்பதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
உன் இதயத்தில் ஓர் இடம்...
உன் மடியில் எனக்கு இல்லை இடம்
உன் இதயத்தில் கிடைக்க பெற
காத்திருப்பேன் ஜென்மம்
ஜென்மாக...