அவளின் பார்வை

வண்ணங்கள் ஆயிரம்
கனவுகள் நூறு
என் மனதோடு
மிளிர கண்டேன்
அவளின் பார்வை
என் மீது!
விழி திறந்து
பயணித்த தெருக்கள்
சற்று புதிதாய்
புலப்பட்டது கண்களுக்கு
என்னவளின்
விழி வழியே கண்டபோது!
எண்ணங்களுக்கு எட்டா
கற்பனையில்
மிதந்து களித்தேன்
விவரிக்க முடியா
உணர்வுகள்
எழுத கிடைக்காத
வார்த்தைகள்
எண்ணி முடியா
ஆசைகள்
என்றும் என்னோடு மட்டும்
என்னவளின்
பார்வை போதும்
இந்த பிறவி
மோட்சம் காண!
ஒரு நொடி பார்வை
ஒவ்வொரு நொடியும்
நெஞ்சில் இனிக்கிறது!
நெஞ்சோடு கிடந்த
என் இளமையின்
கனவுகளை
கொஞ்சம் அள்ளி
வெளிய போட்டது
அவளின் விழி பார்வை!