பெண் பூ
கருவோடு
மலர்ந்த
பாசப்பூ ....
அன்பு
பரப்பும்
ஆசைப் பூ ....
எட்டு
வச்சு நடக்கும்
முல்லை பூ .....
குறுஞ் சிரிப்பு
சிரிக்கும்
குறிஞ்சி பூ ....
தோளில்
ஆடும்
வாசனை பூ .....
பள்ளி
செல்லும்
பவள பூ ....
பாவாடை
அணிந்த
பட்டு பூ ....
பருவம்
அடைந்த
தாமரை பூ ....
வெட்கம்
கொள்ளும்
செவ்வந்த பூ ....
திருமணம்
முடிந்த
சாமந்தி பூ .....
கருவை
சுமக்கும்
மல்லி பூ .....
வாரிசு
தந்த
வாழை பூ ...
துன்பம்
மறந்த
வாடா மல்லி பூ ....
கணவன்
இறந்தால்
தும்பை பூ ....
முதுமையில்
அன்பில்லாமல் வாடும்
எருக்கம் பூ .....
எல்லாம்
கடந்தும்
அன்பை அள்ளி
வழங்கும்
பெண் பூ .......