சுதந்திரம் வாழ்க
சுதந்திரம் வாழ்க
===========================================ருத்ரா
சுதந்திரம் நமது நாடு
சுதந்திரம் நமது உயிர்
சுதந்திரம் நமது காதல்
சுதந்திரம் நமது நட்பு.
சுதந்திரம் நமது கற்பு.
சுதந்திரம் நமது தமிழ்
சுதந்திரம் நமது இந்தியும் தான்.
சுதந்திரம் நமது சமஸ்கிருதம்
சுதந்திரம் நமது ஆங்கிலம்.
சுதந்திரம் நமது எல்லாம் தான்.
சுதந்திரம் நமது அர்த்தம்.
சுதந்திரம் நமது அர்த்தமில்லாதது.
சுதந்திரம் நமது சுதந்திரம்.
சுதந்திரம் நமது சுதந்திரமில்லாதது.
சுதந்திரம் நமது அடிமைத்தனம்.
சுதந்திரம் நமது முட்டாள்தனம்.
சுதந்திரம் நமது கடவுள்.
சுதந்திரம் நமது சைத்தான்.
மீண்டும் மீண்டும் சுதந்திரம்
மீண்டும் நமக்கு எல்லாம் சுதந்திரம்.
=========================================