இனி எப்ப நுழைவாய்.எதிர் பார்க்கிறேன்.


இமை திறந்த
போது
இலகுவாய்
நுழைந்து
விட்டாய்.
உன்னை
ரசித்ததானால்
இமைமூடி
என்னுள்
சிறை வைத்தேன்

அம்மா
கூபபிட்டாள் !
அவசரமாய்
இமை பிரித்தேன்.

கள்ளா!
அதற்குள்
சிறை உடைத்து
எங்கு சென்றாய்
அவசரமாய். .

இனி எப்ப
நுழைவாய்!
எதிர் பார்க்கிறேன்.

எழுதியவர் : (26-Jun-11, 1:27 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 258

மேலே