அப்பா

அப்பா எனும் ஜீவன்
படும் பாடு...
மனைவி பிள்ளைகள்
தினம் ஊண் உறக்கமிட
ஓடுவார் கடமைக்கு
உடல் நலன் கருதாமல்...

அப்பா என்றால் தியாகம்
அவரை புரிதல் சிரமம்
இப்புவியில்...

அப்பா என்றால் பயம்
அவர் கண்டிப்பால் வளரும்
பிள்ளைகள் நலமாய்...

அப்பா என்றால் அன்பு
பிள்ளைகள் பட்டால் துன்பம்
இடிந்து போவார் மனதில்...
கண் கலங்குவார் தினம்
தலையணையில்... ஒருவரும்
அறியாமல்...

எழுதியவர் : பவநி (15-Aug-16, 1:31 pm)
Tanglish : appa
பார்வை : 61

மேலே