பிரிவின் வலியில்

விழி தாண்டும் வெள்ளைத் துளியோடு
வழிகிறது என்னவள் தந்த சோகம்...
மென்மைக் கரங்கள் அறைந்துச் சென்றதால்
கன்னம் கேட்கிறது கண்ணீரின் தாகம்......


வள்ளியவள் பிரிந்ததால் மனமெனும் தோட்டத்தில்
கள்வடியும் பூக்கள் காகிதமாய் விழுகிறது...
சுமைகள் தாங்காது முறிந்திடும் முருங்கையென
இமைகளையே தாங்காது இதயம் அழுகிறது......


கொஞ்சிப் பேசியப் பைங்கிளி கோபத்தில்
நெஞ்சம் முழுதும் தீயை வைத்திட
வேதனைகள் சூழ்ந்து நின்ற தேகத்தில்
வேர்வைத் துளிகளும் வேகமாய் எரிகிறதே......


மார்கழிப் பனியாய் மனதில் புகுந்து
போர்க்களமாய் உள்ளத்தை அவள்தான் சிதைக்க
வேய்ங்குழல் துளையில் நுழைகின்ற காற்று
பாய்கின்றப் புலியாய் என்னைக் கீறுதே......


கள்ளிப் பாலைக் காதலில் தெளித்தாள்...
தள்ளி நின்று இன்னுயிர் வதைத்தாள்...
சேற்றோடு சேர்த்து எனைத்தான் புதைத்தாள்...
வெற்றிவாகை காதலில் சூட நினைக்கையிலே......

எழுதியவர் : இதயம் விஜய் (16-Aug-16, 8:01 am)
பார்வை : 890

மேலே