ஒரு சொல்
ஒரு சொல்
====================================ருத்ரா
உன் ஒரு சொல்
கேட்டு
ஆனந்தக்கண்ணீர்
துளிர்க்க வந்தேன்.
கண்ணீர் அஞ்சலி
ஆகிப்போனது.
மலர்ச்செண்டோடு
வந்தேன்
மலர் வளையம்
ஆனது.
என் கடிதம்
நீ வாங்கும் முன்னே
உன் பத்திரிகை
என் கைக்குள்ளே!
எப்படி இது?
உன் காதல் படத்தை
என் நெஞ்சில் மாட்டும்
முன்னே
அந்த படத்தை
சுவரில் மாட்டி
மாலை போட வைத்து
விட்டாயே!
என் உடல்
நின்று கொண்டிருக்க
என் மனத்துக்கு
சிதை மூட்டியது யார்?
=========================