பிறந்த வீடு புகுந்த வீடு
பெண்ணே... குழந்தை பருவம்
தொடங்கி வளர்கிறாய் தோழியாக
அன்னைக்கு...
கொஞ்சுகிறாய் தந்தையின் தோளில்
இளவரசியாய் வளம் வருகிறாய்
பிறந்த வீட்டில்...
மணவாளன் கரம் பிடித்து
வெகுதூரம் குடிபுகுந்தாய்
பிறந்த வீட்டை மறக்க சொல்லி...
புதிய உறவினில் இன்பம் துன்பம்
கண்டு வளம் வருகிறாய்
மகாராணியாக புகுந்த வீட்டில்...
எங்கோ பிறந்த பெண்
எங்கோ வாழும் பெண்...
உடல் நலம் குறைந்த
போதும் அன்னை மடி
பக்கம் இல்லை...
கிழ பருவம் எய்தி
மண்ணின் மடியில் சாய்ந்து
உறங்கும் நேரம் வந்த
போதும் பிறந்த மண்ணில்
உறங்க வழியில்லாமல்...
புகுந்த மண்ணில் தலை
சாய்ந்து உறங்கத்தான் சாத்தியமா
பெண்களுக்கு...