பெண்ணே பெருமை

பெண்ணே
நீ பிறக்கும் போதே
அழகுடன் பிறந்தவள்
பேர் அழகையும்
பேர் அன்பையும்
உயர் பன்பையும்
உன்னத கற்பையும்
அணிகலன்களையாய் பெற்றவள் நீ ........
அரை குறை
ஆடையில் வருவதில்லை
அழகு !
ஆன் ஆதிக்கத்தை
அறுத்து பெண்கள்
அளவறியா சாதனைகளை செய்யும்
காலம் இது ....
மேல்நாட்டு மோகத்தை விடுத்து
மேன்மை கொண்ட நம் கலாச்சாரத்தை
மனதில் புதைத்து கொள்
அதுவே உனக்கு அழகு !
மகளாய்,
சகோதிரியாய்,
மனைவியாய்,
தாயாய் ,
நல் உறவுகளை பெற்று
சமூகத்தில் உயர போவாள் நீ .......
உன் சுதந்திரத்தை
உடையில் மட்டும் காட்டுவதை விடுத்து
உயரிய பல சேவைகள் செய்து
உனை உயர்த்தி கொள்
உலகில் அன்னை தெரசாவை போல் !
பாரதி கண்ட புதுமை
பாவை இவள் என
உணர செய் பெண்ணே
உன்னை உதறிதள்ளிய பல
உதவக்கரைகள் முன்னே ......
நிமிர்ந்த நடை கொண்டு
நித்தம் நித்தம் பல
சாதனைகள் படைத்து
சாதிக்க பிறந்தவள்
இவள் என
இவ்வுலகம் கூறிட
இப்போதே புறப்பிடு
புது விடியலை காண !