ஒரு தலை காதல்

என் காதல் வந்து சொல்லடி
என் உயிரில் கலந்து நில்லடி....

ஒரு வார்த்தை பேசி எனுயிரை பறித்தவளே!
மறுவார்த்தை பேசி எனுலகை
மறைத்தவளே!

என் காதல் வந்து சொல்லடி
என் உயிரில் கலந்து நில்லடி...

நான் பார்த்த உருவமெல்லாம் மறைகிறது ஒரு நொடியில்...
உன் உருவம் மட்டும்
மறைவதில்லை பல நொடிகளில்...

என் காதல் வந்து சொல்லடி
என் உயிரில் கலந்து நில்லடி...

உன் முகம் பார்த்ததாலே
என் முகமே மறக்கிறேன்...
உன் கண்ணை கண்டதாலே
விண்ணிலே பறக்கிறேன்...
உன் நிழலை பார்த்ததாலே
மழலையாவே மாறுகிறேன்
நீ கடக்கும் இடங்களிலே
மரமாகவே வளர்கிறேன்

என் காதல் வந்து சொல்லடி
என் உயிரில் கலந்து நில்லடி...

உன் தெருவை சுற்றுகிறேன்
உன் முகம் தேடுகிறேன்
உன் நெற்றி வேர்வை கண்டேன்
அவ்வேர்வை நானென்று கொண்டேன்
உன் வெட்கம் பார்த்தேன்
வீழ்ந்து விட்டேன்
உன் மூச்சை சேமித்தேன்
காற்றாக மாற்றிக் கொண்டேன்

என் காதல் வந்து சொல்லடி
என் உயிரில் கலந்து நில்லடி...

உலகிற்கு ஒளி தரும் வான்னிலவு போல
என் வாழவிற்கு ஒளி தரும் பெண்ணிலவாக வருவாயா!

இல்லை என் சடலத்திற்காவது
ஒளி தருவாயா?

ஏங்குகிறேன்...
உருகுகிறேன்...
உன் செவ்விதழ்கள் அசைத்து சொல்லும்
ஒற்றை சொல்லிற்காக...

என் காதல் வந்து சொல்லடி
என் உயிரில்கலந்து நில்லடி...

இப்படிக்கு
ப.தவச்செல்வன்

எழுதியவர் : ப.தவச்செல்வன் (17-Aug-16, 10:05 pm)
சேர்த்தது : ப தவச்செல்வன்
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 210

மேலே