நிலவும் பெண்ணும்

"இன்னிசை வெண்பாக்கள்"


கடலின் அலைகளின்று மீன்விழியாள் பார்த்து
உடலை நனைத்திடப் பாய்ந்திங்கு வந்தது...
வெள்ளைப் புறாவின் மலர்ப்பாதம் தொட்டதும்
பிள்ளை மகிழ்ச்சிப் பெறுது......


வண்ணங்கள் சிந்துகின்ற பொன்முகம் காணவே
விண்ணில் முகிலைக் கிழித்து வலம்வரும்
வெண்ணிலவு தன்னை மறந்துதான் பார்க்குது
மண்ணில் மலர்ந்த நிலவு......


காதலொன்று இல்லாது மேகத்தில் நீந்திடும்
காதலன் இல்லாது மோகத்தில் பூத்திடும்
பெண்கள் அலைமகளி டம்வேண்டும் நேரமின்று
கண்ணில் எழிலோ வியம்......




......முகநூலில் தந்த இந்தப் படத்திற்கு எழுதிய வரிகள்......

எழுதியவர் : இதயம் விஜய் (18-Aug-16, 7:15 pm)
Tanglish : nilavum pennum
பார்வை : 845

மேலே