என்னை அரவணைக்க உன் நெஞ்சம் வேண்டும் 5555

என்னவளே...

நீயும் நானும் ஒரே
கிராமம்தான் என்றாலும்...

உன்னைக்கான நடந்து நடந்து
நான் போட்ட ஒற்றையயடி பாதை...

ஒற்றையடி பாதையில்
என் காதலை ஏற்றுக்கொண்டு...

என்னுடன் நீ
எப்போது வருவாய்...

என் காதலை உன்னிடம்
சொல்ல தினம் வருகிறேன்...

உன் புன்னகையில் மயங்கி
தினம் திரும்பிவிடுகிறேனடி நான்...

மாதந்தோறும் உன் கைகளில்
நீ மருதாணி வைக்கிறாய்...

ஒவ்வொரு மாதமும் என்னிடம்
நீ கேட்கிறாய்...

எப்படி நல்லா
சிவந்திருக்கா என்று...

என் இதயம் சிவந்திருக்குதடி
என் காதலை சுமந்து சுமந்து...

என் உதடுகளின் முனுமுனுப்பு
உனக்கு கேட்கவில்லையா...

சோகம் என்றால் என்னை
அரவணைக்க உன் நெஞ்சம் வேண்டும்...

உன் இம்சைகள்
அதிகம் வேண்டும்...

உன் இதழ்கள் பதித்த
முத்தமாக என் இதழ்களில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Aug-16, 8:34 pm)
பார்வை : 330

மேலே