வண்ணமலர்கள் தலையாட்ட

வருகை தரும்தென்றலில்
வண்ணமலர்கள் தலையாட்ட
தலையாட்டும் மலர்களை
புன்னகையால் அவள் பாராட்ட
பாராட்டில் மகிழ்ந்து
தன்னையே பரிசாகத் தந்தன மலர்கள்
அவள் மெல்லிய கரங்களில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-16, 7:28 pm)
பார்வை : 1169

மேலே