என்னவளே எங்க போன

ஆத்தங்கர ஓரத்தில
அந்திசாயும் சாயும் வேலையில
அரச மரத்தடியில
அள்ளி அணைக்க காத்திருக்கேன்
என்னவளே எங்க போன..

நித்தம் நித்தம் உன நெனச்சு
நெத்தியில பொட்டு வெய்க்க
வானவில்ல வலைச்சு
மாலையாக்கி காத்திருக்கேன்
என்னவளே எங்க போன..

உன்னையே நினைச்சுருக்கேன்
உன்னால வாழ்த்துருக்கேன்
மாமா நீ என் கை புடுச்சு
கூட்டிட்டு போன்னு சொன்னியே
தாலியோட வந்திருக்கேன்
என்னவளே எங்க போன..

அப்பன் அடிச்சாலும்
அம்மா வெஞ்சாலும்
மாமா என் உசுரு
நீதான்னு சொன்னவளே
உன்ன கூட்டிட்டு போக வந்துருக்கேன்
என்னவளே எங்க போன..

அரலிய அரைச்சு குடிச்சுட்டு
மாமன் வருவான்னு
வாசல் பாத்து நின்னவளே
மாமன் வந்துருக்கேன்
என்னவளே எங்க போன..

நினைவ மட்டும் குடுத்துட்டு
நீ நிம்மதியா தூங்கிட்ட
நெஞ்சோரம் உன் நினவ சுமந்து எத்தன காலம் நான் வாழ..

அடிச்சிருக்கி
என்னையும் சேர்த்து
கூட்டிட்டு போ..!!

இது ஒரு கற்பனை கவி..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (18-Aug-16, 7:33 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : ennavale yenga pona
பார்வை : 432

மேலே