காதலித்துப்பார்

காதலித்துப்பார்
கருப்பாய்தான் இருப்பாய்
கதாநாயகனாய் நினைப்பாய்
உன் பள்ளிக்குப் போகாமல்
அவள் பள்ளிக்குப் போவாய்
ரத்தத்தில் கவிதை எழுதுவாய்
யுத்தத்தில் கனவு காணுவாய்
அவள் பின்னால் நடந்தே
உன் செருப்பு தேயும்
காதலித்துப்பார்
அவள் தெரு நாய்களோடும்
நண்பனாவாய்
சாமி இல்லை என்ற நீ
வெள்ளிக்கிழமை கோவில் சுற்றுவாய்
பூக்களின் மகத்துவம்
புரியும்
ரோஜாவின் விலை
தெரியும்
தினமும் அவளோடு
திருமணம் செய்தே
இரவுகள் இனிக்கும்
இறக்கும்
நண்பனின் நடப்பு விளங்கும்
அவள் உறவுகளின் எதிர்ப்பால்
மனம் கலங்கும்
காதல் சொல்ல
நெஞ்சம் துடிக்கும்
அச்சம் வந்து நாவை தடுக்கும்
இறுதியில்
முதல் மாணவனான நீ
முப்பதாம் மாணவனாவாய்
உண்மையில் காதலித்துப்பார்