கண்ணீரை விரும்புதடி என் கனவுகள் கூட 555

ப்ரியமானவளே...

என்னோடு நீ இருந்தபோது காற்றில்
என் கண்கள் கலங்கினால்கூட...

விலைமதிப்பில்லா உன் விழிநீர்
மண்ணில் ஏனடா என்பாய்...

அர்த்தங்கள் ஆயிரம்
சொல்லும் துளிநீர் என்றாய்...

இன்று நான் சிந்தும் கண்ணீர்
உள்ளிருந்து உருகுதடி...

என் உள்ளம் உனக்கு
புரியவில்லையா கண்ணே...

இரவில் நான் காணும் கனவுகூட
கண்ணீரையே விரும்புதடி...

நீ இல்லாமல் நான் வாடும்
பிரிவை எண்ணியே...

வருவாயா கண்ணே மீண்டும்
என்னருகில் நீ ஒருமுறை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Aug-16, 8:18 pm)
பார்வை : 809

சிறந்த கவிதைகள்

மேலே