இறைவேதம்
பல்லவி :
அன்பே ........
காதல் பூப்பூத்து
நெஞ்சில் சிரிக்கிறதே .... .!
சாரல் கைகோர்த்து
தென்றல் அடிக்கிறதே ......!
இடிபோடும் வானம் இங்கே
ஜதி பாடும்...... !
அதைக்கேட்டு மேகம் நாளும் தேன்தூறும் .......!
அழகே உன்உறவு எனக்கு இறைவேதம் ......!
சரணம்:1
காத்தாடும் நாத்தப்போல
மனசோடு உன் நெனப்பு
கூத்தாடும் நெஞ்சுக்குள்ள
நாளும் சுகமா ......!
பாய்விரிக்கும் புல்லின்மேலே படுத்துறங்கும் பனியப்போல
காதல் நெஞ்சம் நாளும் தந்து
சுமப்பேன் இதமா ......!
உன் பேர யாரும் அழுத்தி சொன்னாலே அழுதிடுவேன் ......!
உன் பாத மண்ணெடுத்து கோவில்கட்டி தொழுதிடுவேன் .....!
அழகே உன்நிழலில் நாளும் வாழ்ந்திடுவேன் .......!
சரணம்:2
ஆகாய நெலவப்போல
உன்னோடு சேர்ந்துவாழ வரம்கேட்ப்பேன் சாமிகிட்ட
நாளும் அன்பே......!
நீயின்றி நானும் வாழ்ந்தால்
என் வாழ்வில் அர்த்தம் இல்ல
பூமியில சொர்க்கம் இல்ல இறப்பேன் முன்பே ......!
தாய்போல வந்தாய் பெண்ணே உந்தன் மடிதான் உலகமடி .....!
உன் தோழில் சாயும் நேரம்
எந்தன் சோகம் விலகுமடி .....!
உன்நினைவே போதும் வாழ்வேன் யுகம்கோடி .......