என் காதல் என் கனவு

அன்புக்காக ஏங்கிய நேரத்தில் - நீ வந்தாய்
அன்பை அள்ளிக் கொடுத்தாய்
ஆசை முத்தமிட்டாய்
மார்போடு அனைத்துக் கொண்டாய்
நீ தான் என் உலகம் என்று உணர வைத்தாய்!

என் கைக்கோர்த்து நடந்தாய் - சாலைகள்
எல்லாம் சோலைகளாயின
உந்தன் அருகில் - வெயில் கூட
நிழலாய் தெரிந்தன
தோள் மீது சாய்த்துக்கொண்டாய் - நீ தான்
என் சொந்தம் என்று நினைக்க வைத்தாய்

கண்கள் முழுவதும் உன் பிம்பம்
இதயம் முழுவதும் உன் சுவாசம்
நான் வரைந்த ஓவியம் நீ - ஏன்
உயிர் பெறும் முன்னே மறைந்து விட்டாய்
இன்று உன்னை காணாமல்
என் விழிகள் திறக்க மறுக்கின்றன
இதயமோ துடிக்க நிறுத்தி விட்டன

நானோ கல்லறையில் .........
நீயோ மணவறையில் ..........

ஏன் இந்த சந்திப்பு ........!
ஏன் இந்த பிரிவு .............!

எழுதியவர் : M . சரண்யா (19-Aug-16, 2:44 pm)
பார்வை : 100

மேலே