உணர்ந்து கொள்

என் காதலில் இல்லை கள்ளம்
என்னை என்று ஏற்கும் உனது உள்ளம்?

வாழ்க்கையில் உண்டு ஆயிரம் மேடு பள்ளம்
அதை ஏற்க மறுத்தால் ஏதுப் இன்பம்?

ஆவதும் அழிவதும் யாரால் இங்கு ?
வாழ்வதும் வீழ்வதும் உனக்குள்தான் இருக்கிறது.....!

உன்னை நீயே அறியாதிருந்தால் ...
பிறரை நம்பியே நீ வாழ வேண்டும் தோழா..!
அதுதான் உன் ஆறாம் அறிவா? வாழ்வா?

எட்டு திசையையும் நீ எட்டுப் பிடி
எதையும் நீ விரும்பி உணர்ந்து படி ...!

ஒவ்வொரு தோல்வியும்
உன்னை புதிப்பிக்கும் என்பதை மறவாதே - நீ!

இதை நீ ஏற்க மறுத்தால்...
விரைவில் நீ...
பிணமாவது உறுதி...!

எழுதியவர் : கிச்சாபாரதி (20-Aug-16, 9:52 pm)
Tanglish : unarndhu kol
பார்வை : 89

மேலே