பாசம்

நட்பு என்பது விழுது போல்
காதல் என்பது சாரம் போல்
பாசம் என்பது வேர்கள் போல்
வாழ்க்கை என்பதில் இம்மூன்றும் உயிர் போல்.

பாசம்
உறவுகளின் பாலம்
உரிமைகளின் பாவம்
உணர்வுகளின் வேதம்
இவைகளுக்கு இடமில்லை என்றால் பாசம் எங்கே செல்லும்?

பாசம்
பணமில்லாதவருக்கு பனிப்போர்
பணமுடையோருக்கு செருக்குப்போர்
குணம் கொண்டோருக்கு கண்ணீர்ப்போர்
குணம் இல்லாதோர்க்கு இடஞ்சல்போர்

பாசம்
மரியாதையை கேட்டுப்பெறும்
உறவுகளின் முறையில் கோடிடும்
அளவுகளை சீரமைக்கும்
குடும்பத்தை கண்ணாடிபோல் பளபளக்க வைக்கும்
அந்தக்கண்ணாடியில்
மனக்கீறல் தெரியும்
எண்ண அழுக்கு புரியும்
வஞ்சக விரிசல் இன்னும் விரியும்.

பாசம் ஒரு நல்ல பணம்
அதை பிரித்தாலும் சில்லறைகள் கொட்டும் ஒலிக்கும்.
அது கெட்ட பணமானால்
சுயநலத்தால் ஒதுக்கப்படும் ஒரவஞ்சத்தால்
அதை பிரித்தால் மொத்தமும் சிதறுண்டு போகும்.

பாசம் தாய்பால் போல
ஸ்பரிசத்துடன் கொடுக்கையில் தலை வாரும்
உண்ண உண்ண வயிறு நிறையும் மனதும் கூட
கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும்
கவிச்சி அடிக்கலாம், அது இன மணம், உள் மனம்.

நட்பும் காதலும் புட்டிப்பால் போல்
உண்பதில் சுயநலம் இருக்கலாம்
அது ஒளிந்திருப்பது பின்னாள் தெரியலாம்
தெரிந்தால் வருந்தலாம் உடனே பிரியவும் செய்யலாம்
தெளிந்து மீண்டு வரலாம் மீண்டும் வந்தாலும்
தளர்ந்து செல்லத்தான் வேண்டும்
வேகம் இடம் விவேகம் வலம் என
முன்னும் பின்னும் பார்த்து முகஞ்சுளிக்கும்.

பாசத்தில் இடறுபவர்களை
கை நீட்டி கை கோர்க்கும்
கடைசி வரை கரை சேர்க்கும்,
ஊரும் உறவும் அக்கம் பக்கம்.

அது தான் பாசம்
அது ஒரு பகவத்கீதை,
அதை புரியாதவர்களுக்கு
தினம் தினம் வாழ்க்கை
ஒரு மகாபாரதம் இல்லை
வன வாசம் ஏற்கும் ராமாயணம்.!

எழுதியவர் : செல்வமணி (20-Aug-16, 10:33 pm)
Tanglish : paasam
பார்வை : 221

மேலே