அம்மணமாய் நின்றது ஞாபகம்

சித்திரத்தை சுரண்டி
முடித்த பிறகு
சுவற்றில் அம்மணமாய்
நின்றது ஞாபகம்....
------------------------------------------

கடல் பற்றி எரிகிறது
பசித்த பறவையின்
கடைசி சிறகசைப்பின்
நிழல் தொட்டு....
-----------------------------------------

கம்பிகளில் வழிகிறது
திரும்பிய ரயிலின்
கொஞ்சம் வளைவுகள்...
---------------------------------------

தவளைகளின் மழைக் காலத்தில்
ஜன்னல் திறந்து காத்திருக்கிறது
அடி வயிற்று கத்தல் ஒன்று...
-----------------------------------------------------

பேசி முடிந்த பிறகு
கூந்தல் ஆனது
கூச்சம்...
-----------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Aug-16, 10:30 pm)
பார்வை : 97

மேலே