தொலைந்த நேசம் பாசம்
பேரனும்
பேத்தியும்
பைத்தியமாய்
இருக்குது
தொலைபேசி
விளையாட்டில்......!!
தாத்தாவும்
பாட்டியும்
காட்டிய
பாசம்
புரிதல் இல்லாமல்
போச்சு.....வேறு
வழியின்றி.....
தொலைக்காட்சி
தொடர்தான்
துணையாச்சு.....!!
அவளை
பிரிப்பதும்.....
அவனைக்
கொல்வதும்.....
கருவைக் கலைப்பதும்
என்று
மனதை நெருடும்
வேதனைக்
காட்சி......அவர்தம்
வேதனையை
அள்ளிக்கொட்டியதே......!!!
சீரியல்
அடிமைகளாக
பெரியோரும்.....
தொலைபேசி
விளையாட்டில்
சிறியோரும்.....
சுதந்திர நாட்டின்
அடிமைகளாகினர்......!!!!