முகநூல் மூலமும் அரசு செய்திகள்
முகநூல் மூலமும் அரசின் செய்திகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியை செய்தித் துறை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முதல்வரின் அறிவிப்புகள், அரசின் சாதனைகள், மக்கள் நலத்துறை திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகள், புகைப்படங்கள், விடியோ துண்டுப் படங்கள் ஆகியவற்றை செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகள் மற்றும் பிற ஊடகங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்து பொதுமக்கள் எளிதாக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் பணியினை செய்தி மக்கள் தொடர்புத் துறை செய்து வருகிறது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணையதளமான www.tndipr.gov. மற்றும் அரசு இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகியவை மூலம் நாள்தோறும் பொதுமக்களுக்கு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய சூழ்நிலையில் சமூக வலைதளங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் காரணமாக அரசின் அனைத்துச் செயல்பாடுகளும் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வரும் முகநூல் வாயிலாக தமிழக முதல்வரின் அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை உடனுக்குடன் பதிவிட்டு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. TN DIPR என்னும் முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக அரசின் ஆக்கப்பூர்வமான பணிகளையும் முதல்வரின் அறிவிப்புகளையும் மக்களிடையே எடுத்துச் செல்லும் பணியினை செய்தி மக்கள் தொடர்புத் துறை மேற்கொண்டு வருகிறது.