சிந்து செய்த தியாகங்கள், பட்டியலிடும் கோபி சந்த்
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று புகழின் உச்சத்துக்கே சென்று விட்ட சிந்து, தனது குருநாதர் கோபிசந்த்தின் கனவையும் நனவாக்கி இருக் கிறார். தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்பு களையும், சாக்லெட்டுகளையும் சிந்து தொடுவதே இல்லை. காபி குடிக்கும் பழக்கமும் கிடையாது. ஐதராபாத் பிரியாணி, சர்க்கரை கலந்த தயிர், ஐஸ் கிரீம் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம்.
ஆனால் , தனக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை கலந்த தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை எல்லாம் தீவிர பயிற்சிக்காக தியாகம் செய்ததுடன், சுமார் மூன்று மாத காலம் தனது செல்போனை கூட பயன்படுத்தாமல் ஒலிம்பிக் பதக்கத்துக்காக அவர் பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். இதுகுறித்து அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறியதாவது:
ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்று பதக்க மேடையில் நிற்கும் வாய்ப்பு நூறு கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பாகும். எங்கள்மீது நம்பிக்கை வைத்து, வெற்றிப் பயணத்தை நோக்கி எங்களை வழி நடத்திச் செல்ல ஆதரவு அளித்த மக்க ளுக்கு நன்றி.
தற்போது, எண்ணிய காரியத்தை முடித்து விட்டதால் சிந்து இனிமேல் 21 வயது இளம் பெண்ணுக்குண்டான வழக்கமான செயல்களை தொடரலாம். தனது தோழிகளுடன் வாட்ஸ்அப்பில் உரையாடலாம், பிடித்தமான ஐஸ்கிரீமை அவர் சாப்பிடலாம்.
கடந்த மூன்று மாதங்களாக சிந்து தனது செல்போனை பயன் படுத்தவே இல்லை. முதல்வேலை யாக அவரது செல்போனை சிந்துவிடம் திருப்பி அளிக்கப் போகிறேன். இரண்டாவதாக ரியோவில் இரு வாரங்களுக்கு மேலாக அவருக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை கலந்த தயிர் சாப்பிடுவதையும் நான் தடுத்து வைத்திருந்தேன். அதேபோல் ஐஸ் கிரீம் சாப்பிடவும் தடை விதித்திருந்தேன். இனி அவர் விரும்பியவற்றை எல்லாம் சாப்பிட லாம்.
கடந்த இரண்டு மாதங்களாக சிந்து செய்துவந்த பயிற்சிகள் அபாரமானவை. குறிப்பாக கடந்தவாரம் அவரது ஆட்டத்தில் அதிகமான உத்வேகம் வெளிப் பட்டது. மிகவும் அனுபவித்தும், தனது பொறுப்பை உணர்ந்தும் தன்னிடம் உள்ள திறமையை ஒருசேர அவர் வெளிப்படுத்தினார். சிந்துவிடம் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அந்த வகையில் ஒரு பயிற்சியாளராக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சிந்து மிகவும் இளம்பெண் ணாக உள்ளார். இந்த போட்டியின் போது அவரிடம் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மேலும் மேலும் வளரக்கூடிய ஆற்றலும் அவரிடம் உள்ளது. நாட்டுக்கு பதக்கம் வாங்கித் தந்ததன் மூலம் நம்மை எல்லாம் அவர் பெருமைப்படுத்தியுள் ளார்,
இழந்த தங்கப் பதக்கத்தை பற்றி நினைக்காமல் வென்ற வெள்ளிப் பதக்கத்தை நினைத்து பெருமைப்படும்படியும், இந்த இரண்டாவது இடத்தை பிடிக்க கடந்தவாரம் செய்த கடுமையான பயிற்சியை எண்ணிப் பார்க்கும்படியும் சிந்துவிடம் நான் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.