மண்ணை மலடாக்கும் யூரியாவை ஒழிப்போம்
யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூட நம்பிக்கையை உருவாக்கிட்டாங்க...
யூரியா மூட்டையில் 46 சதவிகிதம் நைட்ரஜன்’னு (தழைச்சத்து) எழுதியிருக்கான்.
ஆனால், நாம பள்ளிக்கூடத்துல என்ன படிக்கிறோம்? வீசுற காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கு. காற்றுலயே அவ்ளோ இருக்கும் போது, எதுக்கு பொண்டாட்டி தாலியை அடகு வச்சு யூரியா வாங்கிப் போடணும்?.
காற்றில் இருக்கிற தழைச் சத்தை இழுத்து மண்ணுக்குக் கொடுக்கிற தட்டைப் பயறு, உளுந்து, துவரை மாதிரியான பயறு வகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்.
மண்ணை மலடாக்கும் யூரியாவை ஒழிப்போம்.
–இயற்கை வேளாண் ஞானி கோ.நம்மாழ்வார்.