பெண்ணிய எண்ணங்கள்

வீணை மீட்டும் விரல்களை
------வெண்டைக்காய் நறுக்கச் சொல்வது என்ன நீதி ?
விந்தைமிகு புன்னகைக்கு
------சமையல் அறை சட்டிகளின் சத்தம் சந்தமா ?
வெற்றிமெடல் பெற்றுவரும் வீராங்கனைகளுக்கு
------அடுக்களையில் சமையல் வேலையா ?
ஆற்றல்மிகு மகளிரில் மாற்றுத் திறன் காண விழைவது
-----மனிதா பெண்மைக்கு நீ செய்யும் துரோகம் அல்லவா ?

-------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-16, 9:27 am)
Tanglish : pennea ennangal
பார்வை : 454

மேலே