முகூர்த்த நாள்
திருமண முகூர்த்தம் ...
@மருதுபாண்டியன். க
அன்று நல்லமுகூர்த்த நாள்!
மல்லிகை சூடி
மஞ்சள் முகத்தில்
திலகமிட்டு
புன்னகை மலர்ந்து
வந்துகொண்டிருந்தாள்
மணப்பெண் ...
கூரைப்புடவையில்
மங்கையவள் ஓரப்பார்வையில்
காதல் கடிதம் அனுப்பினாள் ..
படித்து பார்க்குமுன்
அருகில் அமர்ந்தாள் ..
மல்லிகை வாசனையோ
அவள் அழகின் ரசனையோ
மயக்கத்தில் நான் ..
தாலியைக்கட்டுவதா
அவளைக்கட்டுவதா
என்ற குழப்பத்தில் தடுமாற்றம் ....
நல்லவேளை கெட்டிமேளம் கொட்டினார்கள்
என் கைகள் மட்டும் கட்டியது...
மனம்தான் பாவம்...
அடியே!!
இப்போது கேட்கிறாய்
ஏன் அப்படி முழித்தீர்கள்
தாலிக்கட்டும் போது ...
சிரிப்பு மட்டுமே பதிலாய் வருகிறது!!
அவள் அன்று அனுப்பிய
ஓரப்பார்வை காதல்கடிதத்தை
நான் மட்டும் நான்கு வருடமாய்
தினமும் ரசிக்கின்றேன்
எனக்கும் மட்டுமே புரியும்
அதன் வரிகள்...
தொடர்கிறது அவள் விழி வழி கடிதங்கள் ...