தினம் ஒரு காதல் தாலட்டு - தனிமை 77 = 201

“கோபமா போகும் பொன்னம்மா
இந்த கோபம் உனக்கு நியாயமா
என் மேல் கோபம் ஏனம்மா
நான் என்ன செய்தேன் பாவமா..?
சொன்னாதானே தெரியும்
சொல்ல ஏன் தயக்கம்
ஏங்குது என் மனசு
திரும்பி நீ பேசு..!”

வாழைமரம் போல வளந்துவிட்டாய் பொண்ணு
வாக்கப்படும் நாளை எனக்கு சொல்வாய் கண்ணு
ஆசைப்பட்டு வாங்கியாந்தேன் கைநிறைய பண்ணு
இஷ்ட்டப்பட்டு எல்லாத்தையும் மெதுவாய் திண்ணு

நூலைகொண்டு சீலை பிண்ணுவது என் வேலை
மைய்யல் கொண்டேன் வெகுநாளாய் உன் மேல
ஆளைக்கண்டதும் நீ ஏன் வெகுதூரம் ஓடிப்போற..
என்னைக்கண்டாலே உனக்கு ஆகலையா மானே..


சுத்துகிற விழிகளுக்கு சொந்தக்காரி – உன்னை
முத்துரத வீதிக்கு அழைத்துப்போறேன்
தென்னகத்தில் எனக்குத் தெரியாத ஊரே இல்லை
இன்ப பூவே நீதான் எந்தன் வானுயர்ந்த முல்லை…!

எழுதியவர் : சாய்மாறன் (23-Aug-16, 4:55 pm)
பார்வை : 78

மேலே